தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இன்று ரயில் "டிக்கெட் புக்கிங்' ஆரம்பம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு ரயில்களில் செல்ல விரும்புவோர், இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கு, அதிகமானோர் வருவர் என்பதால், கூட்டத்தை சமாளிக்க, ரயில்வே நிர்வாகம், சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது.
நகர மயமாதல் காரணமாக, கிராமங்களில் இருந்து, நகரங்களில் குடியேறுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், தென் மாவட் டங்கள் உட்பட, அனைத்து மாவட்டங்களிலும் இருந்து, ஏராளமானோர் வேலை வாய்ப்பிற்காக, சென்னையில் குடியேறி உள்ளனர். அதேபோல், கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற நகர் பகுதிகளிலும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர், ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
பயணம்: @@சொந்த ஊரை விட்டு, வேலைக்காக பிற ஊரில் தங்கியிருப்போர், முக்கியப் பண்டிகைகளைக் கொண்டாட, சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, குடும்பத்துடன் அனைவரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். சென்னை, கோவை, சேலம், போன்ற பகுதிகளில் தங்கியுள்ள, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊருக்கு செல்ல, ரயிலை அதிகம் விரும்புகின்றனர். அதேபோல், தென் மாவட்டங் களில் தங்கியிருக்கும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ரயிலில் அதிகம் பயணம் செய்கின்றனர். பஸ்சில் பயணம் செய்தால், கட்டணம், பயண நேரம் அதிகம்; உடல் அசதி ஏற்படும். பாதுகாப்பும் கேள்விக்குறி தான். எனவே,
பண்டிகைக்காக ஊருக்கு செல்வோர், ரயில்வேநிர்வாகம், முன்பதிவை துவக்கும் நாளில், முன்பதிவு செய்து விடுகின்றனர். தற்போது,பெரும்பாலானோர் கம்ப்யூட்டர், லேப்-டாப் வைத்திருப்பதால், முன்பதிவு
துவங்கியதும், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகின்றனர்.
இவ்வசதி இல்லாதோர், ரயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
துவக்கம்:@@ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை, நவம்பர், 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, தீபாவளி ரயில் பயணத்துக்கான முன் பதிவு, இன்று துவங்குகிறது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, அக்டோபர், 30ம் தேதி, ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருப்போர், இன்று முன்பதிவு செய்தால், படுக்கை வசதியுடன், சுகமாக பயணம் செய்யலாம். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க விரும்புவோர், அக்டோபர், 30ம் தேதி பயணம் செய்வதற்கு, இன்றும், அக்டோபர், 31ம் தேதி பயணம் செய்வதற்கு நாளையும், நவம்பர் 1ம் தேதி பயணம் செய்வதற்கு, செப்., 2ம் தேதியும், முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தோர், தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பிற்காக, காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஏற்பாடு: @@தீபாவளி பண்டிகைக்காக, ஏராளமானோர் முன் பதிவு செய்வர் என்பதால், ரயில்வே நிர்வாகம், முக்கிய நிலையங்களில், கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க, ஏற்பாடு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், பெசன்ட் நகர், கிண்டி, தாம்பரம், பரங்கிமலை, கடற்கரை ரயில் நிலையம் உட்பட, அனைத்து ரயில் நிலையங்களிலும்,
கூட்டத்திற்கேற்ப, கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், கோவை நகரில், மூன்று சிறப்பு டிக்கெட் கவுன்ட்டர்; வட கோவை ரயில் நிலையம், சேலம் ஜங்ஷன், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன், ஈரோடு, ஆகிய இடங்களில் தலா ஒரு சிறப்பு கவுன்ட்டர், திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென் மாவட்ட ரயில் நிலையங்களில் உள்ள, கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில், தேவைப்பட்டால், கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கும்படி, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்:@@ தீபாவளிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகளை கேட்ட போது, தீபாவளி நெருக்கத்தில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலை பார்த்து, அதற்கேற்ப முக்கிய நகரங்களுக்கு இடையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றனர்.- நமது நிருபர் குழு -
No comments:
Post a Comment