Search This Blog

Tuesday, 24 December 2013

செக்ஸ் அனுபவிப்பதை நேரடியா பார்த்து தீர்வு சொன்ன டாக்டர்..கோவையில் பரபரப்பு!.

செக்ஸ் அனுபவிப்பதை நேரடியா பார்த்து தீர்வு சொன்ன டாக்டர்..கோவையில் பரபரப்பு!.

கோவை அருகே செக்ஸ் குறைபாடு உள்ளவர்களை விபச்சாரம் செய்பவர்களிடம் அனுப்பி உல்லாசம் அனுபவிப்பதை நேரடியாகப் பார்த்து மருந்து கொடுத்து வந்த செக்ஸ் டாக்டர் கைது செய்யப்பட்டார். கோவை இடையர்பாளையம் மருதம் நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவர் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பாலியல் மருத்துவராக உள்ளார். அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்த கிளினிக்கிற்கு ஏராளமானோர் செக்ஸ் சம்பந்தமான ஆலோசனைக்கு வருவார்கள். அவ்வாறு வருபர்களை நைசாக பேசி நல்ல மாத்திரை மருந்து தருகிறேன். செக்சில் முழு திருப்தி ஏற்பட தனக்கு தெரிந்த பெண் புரோக்கர்கள் உள்ளனர். அவர்களிடம் இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் உல்லாசமாக இருப்பதை நான் காணவேண்டும். அப்போது ஏற்படும் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு சிலர் சம்மதித்தனர் அதைத்தொடர்ந்து அவர்களை காளப்பட்டி நேரு நகரில் பங்களாவில் விபசாரம் நடத்தி வரும் லதா (43), மைல்கல்லை சேர்ந்த சபி (30) ஆகியோரிடம் அனுப்பி வைப்பார். பின்னர் டாக்டர் யுவராஜ் அந்த பங்களாவுக்கு செல்வார். அங்கு தான் அனுப்பி வைத்தவர்கள் இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரடியாக பார்த்து ஆலோசனை வழங்குவார்.

இதற்காக நாள் ஒன்றுக்கு விபசார கும்பல் ரூ.10 ஆயிரம் வசூல் செய்யும். அதில் டாக்டர் யுவராஜூக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இது கடந்த 5 வருடங்களாக நடந்து வருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் விபசார கும்பலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மடக்கிப்பிடித்தனர். இந்த கும்பலில் தொடர்புடைய டாக்டர் யுவராஜ், புரோக்கர்கள் லதா, சபி ஆகியோரை கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகள் ஆந்திராவை சேர்ந்த சிந்து (27), ரோஜா (35) மற்றும் சென்னையை சேர்ந்து சினிமா துணை நடிகை மீரா (23) ஆகியோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செக்ஸ் டாக்டரே விபசாரத்துக்கு துணை போனது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment