பெண்களுக்கு சம உரிமை வேண்டும் : சோனியா
புதுடில்லி: நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக உருவாக்கப்பட வேண்டும் என்றும், இவர்கள் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதிலும் , அவர்களுக்கான அதிகாரம் முழு அளவில் பெற்று தருவதிலும் நாம் இன்னும் அதிகம் செயல்பட வேண்டியுள்ளது என காங்.,தலைவர் சோனியா டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் : பெண்களுக்கு ஆதரவான சட்டங்களும், கொள்கைகளும் இன்னும் முழு அதிகாரம் பெறவில்லை. அதனை பெற நாம் தான் அடித்தளத்தில் இறங்கி போராட வேண்டும்
பெண்களுக்கு பலம் தரக்கூடிய அதிகாரம் அளிக்க அனைத்து வழிமுறைகளும் , மத்திய அரசு செய்து வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சமூக புரட்சியை நாம் உருவாக்க , நமது சமூகத்தின் பழமைவாத சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்குண்டான சமூக தகுதியை வழங்க நாம் முன்வர வேண்டும். வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருந்தபடி இந்த சமூகத்தை குழந்தைகள் காண துவங்குகின்றனர். வீட்டில் உள்ள ஆண் குழந்தைக்கு அளிக்கப்படும் அதே முன்னுரிமை பெண் குழந்தைக்கும் அளிக்கப்பட வேண்டும். ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கும் சம தகுதியை ஏற்படுத்துவது சவாலான செயல். பெண்களுக்கு எதிரான அநீதிகள் ஒழிக்கப்படாவிட்டால் நாம் இந்த விஷயத்தில் வெற்றியடைய முடியாது.
வெறும் சட்டங்களை இயற்றுவதோடு நின்று விடாமல் செயல்படுத்துவதில் முக்கியம் பெற வேண்டும். கொள்கைகளும், சட்டங்களும் இன்னும் போதுமானதாக இல்லை. பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும். அச்சமற்று, பாதுகாப்பு உள்ளவர்களாக வாழ பெண்களுக்கு உரிய மரியாதை கிடைத்திட தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
No comments:
Post a Comment