100 ரூபாய் நாணயம் வெளியீடு
சேலம்: சி.சுப்பிரமணியத்தின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை கவுரவப்படுத்தும் வகையில், ரிஸர்வ் வங்கி, 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தவர் சி.சுப்பிரமணியம். இவரது, நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தாண்டு, ரிஸர்வ் வங்கி, 100 ரூபாய் நாணயம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து, பாராமஹால் நாணய சங்க செயலாளர் சுல்தான் கூறியதாவது: இந்தியாவில் புகழ் பெற்ற அரசியல்வாதிகள், அறிவியல் அறிஞர்கள், சாதனை படைத்தவர்கள் ஆகியோரின் நினைவாக, ரிஸர்வ் வங்கி, நாணயங்களை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை ஆகியோரின் உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயங்களை ஏற்கனவே, ரிஸர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதே போல், சி.சுப்பிரமணியத்தின், நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, 100 ரூபாய் நாணயம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை, ரிஸர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 100 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வராது. 100 ரூபாய் நாணயத்தில், 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல், ஐந்து சதவீதம் துத்தநாகம் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment