தமிழகம் முழுவதும் 200 பஸ்கள் கோர்ட்களில் முடக்கம்: நஷ்ட ஈடு கொடுக்க முடியாததால் சிக்கல்
விபத்து இழப்பீடு வழங்க முடியாததால், நீதிமன்றங்களால், ஜப்தி செய்யப்பட்ட, 200 அரசு பஸ்கள், நீதிமன்றங்களிலேயே முடங்கி நிற்கின்றன. நிதி தள்ளாட்டத்தில் இருக்கும் அரசுபோக்குவரத்துக் கழகங்கள், பஸ்களை மீட்க முடியாமல் திணறி வருகின்றன. பயணிக்க போதுமான பஸ்கள் இல்லாததால், பயணிகளும் தவிக்கின்றனர்.
தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம்21,202 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றை, 10 கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
நிதி தட்டுப்பாடு:
பஸ்களின் இயக்கம் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு, தினந்தோறும், சராசரியாக,20 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கிறது. ஆனால், வருவாய்க்கு மேல், செலவினங்கள் அதிகரித்து வருவதால், போக்குவரத்துக் கழகங்கள்,
நிதி தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த, 2012 மே, 15ம் தேதி, சட்டசபையில், போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையின் போது, விபத்துகளை ஏற்படுத்தி, இழப்பீடு வழங்காததால், நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 210 பஸ்களை மீட்டு, மீண்டும்
இயக்க, 13.91 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
தள்ளாட்டம்:
அரசு
சார்பில், 50 சதவீதமும், 50 சதவீதத்தை போக்குவரத்துக் கழகங்களும் வழங்க
வேண்டும் என்ற நிபந்தனைபடி, பஸ்கள் மீட்கப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டன.
டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள், டயர், டோல்கேட் கட்டண உயர்வு, தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்டசலுகைகளால், மீண்டும் போக்கு வரத்துக் கழகங்கள் நிதியின்றி, தள்ளாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை,
கும்பகோணம், நெல்லை ஆகிய, கோட்டங்களில்,விபத்தை ஏற்படுத்தி விட்டு, இழப்பீடு வழங்காத, 200 பஸ்கள், நீதிமன்றங்களால், ஜப்தி செய்யப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கழகங்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள்
பயன்பாட்டுக்கு தேவையான பஸ்களை இயக்க முடியாத சூழலும் ஏற்பட்டு உள்ளது.
எனவே, அரசு, நீதிமன்றங்களில், நிறுத்தப்பட்டுள்ள, பஸ் களை மீட்டு தர,
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
டோல்கேட் கட்டணம்:
போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுக்கு, அரசு, போதுமான அளவு, நிதி உதவியை வழங்கிய போதிலும், தொடர்ந்து, அதிகரித்து வரும் டீசல், ஆயில், டயர், உதிரி பாகங்களின் விலை உயர்வுடன், டோல்கேட் கட்டண உயர்வும், கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு, கல்வித்துறை சார்பில், போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய, 1,300 கோடி ரூபாய், நிலுவையாக உள்ளது.இந்த தொகையை, அரசு வழங்கினாலே, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள, பஸ்களை மீட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு இயக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment