Search This Blog

Saturday, 28 September 2013

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; இன்னுயிரை மீட்க தொடர் முயற்சி

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; இன்னுயிரை மீட்க தொடர் முயற்சி

திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விவசாய வேலை பார்த்து கொண்டிருந்த தாய் குழந்தையை கவனிக்க தவறியதால் தற்போது குழந்தை 200 அடி ஆழ பள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது.
புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,

ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டி வருகின்றனர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

No comments:

Post a Comment