Search This Blog

Thursday, 5 September 2013

ரீமிக்ஸ் பாடிய கெய்ல்

ரீமிக்ஸ் பாடிய கெய்ல்

"கங்னம் நடனமாடி ரசிகர்களை கவர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தற்போது ஏ.ஆர். ரகுமானின் "ரீமிக்ஸ் பாடலை பாடி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், 33. சிக்சர் அடிப்பதில் வல்லவரான இவர், 2012ல் இலங்கையில் நடந்த "டுவென்டி-20 உலககோப்பை தொடரில், பிரபலமான "கங்னம் நடனத்தை மைதானத்தில் ஆடி அசத்தினார். இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற பின் கெய்லுடன் இணைந்து ஒட்டு மொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் "கங்னம் ஆடியதை, யாராலும் மறக்க முடியாது.
இயற்கையாவே நடனமாடும் திறமை படைத்த கெய்ல், தற்போது ஒரு தனியார் மதுபான நிறுவனத்தின் விளம்பரத்திற்காக, "ஹம்மா ஹம்மா பாடலின் "ரீமிக்சை பாடியுள்ளார். இதில் பிரபல பாலிவுட் நடிகர்களான புராப் கோஹ்லி, மெய்யாங் சாங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுவரை இமாலய சிக்சர்களின் மூலம் ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளையடித்த கெய்ல், தற்போது விளம்பரங்களின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறக்க துவங்கியுள்ளார்.

No comments:

Post a Comment