Search This Blog

Monday, 21 October 2013

பிரசாரத்திற்கு சச்சினை இழுக்கிறது ; தேர்தலில் வெற்றி பெற காங்.,யுக்தி

பிரசாரத்திற்கு சச்சினை இழுக்கிறது ; தேர்தலில் வெற்றி பெற காங்.,யுக்தி

போபால்: வரவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் பிரபல கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சினை காங்கிரசுக்கு இழுக்க பேரம் பேசப்பட்டு வருவதாக மத்தியபிரதேச அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக சில மத்திய அமைச்சர்களிடம் இந்த பொறுப்பை வழங்கி இருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த வாரத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதன் படி வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் முழுமையாக ஓய்வு எடுக்கவுள்ளார்.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் சச்சினை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன்படி இவரிடம் காங்கிரசுக்கு பிரசாரம் செய்யுமாறு அழைக்க மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா முயற்சி செய்வார் என ம.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இங்கு பிரசாரத்தைதுவங்கினால் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் சச்சின் பிரசாரம் செய்ய செல்லும் நிலை ஏற்படும்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இங்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்., எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என கருதுகிறது. இதற்கென தேர்தல் கமிட்டி பொறுப்பாளராக ஜோதிராதித்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சச்சினுக்கு மிக நெருங்கிய நட்புக்குரியவராம்.
இவர் விரைவில் சச்சினிடம் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012 ஜூன் மாதம் விளையாட்டு துறையில் ஆற்றிய சேவைக்கு அவரை கவுரவிக்கும் வகையில் சச்சினுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். என்ன நடக்க போகிறதோ !

No comments:

Post a Comment