Search This Blog

Friday, 22 November 2013

வயதானவர்களுக்கான ஓய்வூதியம் 10 மடங்கு உயர்த்தப்படுகிறது: மத்திய அரசு முடிவுஇந்தியா

வயதானவர்களுக்கான ஓய்வூதியம் 10 மடங்கு உயர்த்தப்படுகிறது: மத்திய அரசு முடிவுஇந்தியா

புதுடெல்லி, வயதானவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 80 வயது வரை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.500 மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சமீப காலமாக இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. மேலும் அவர்கள் வாழ்க்கையை கடும் சவால்களுக்கிடையே நகர்த்த வேண்டியதுள்ளது.
இதுபற்றி ஆய்வு செய்த மத்திய சமூக நீதி அமைச்சகம், நாட்டில் உள்ள வயதானவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகையை 10 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி மாதந்தோறும் ரூ.250 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இனி ரூ.1000 கிடைக்கும். மாதம் ரூ.500 ஓய்வூதியம் வாங்கி வருபவர்களுக்கு இனி ரூ.2 ஆயிரம் கிடைக்கும்.
மத்திய சமூக நீதி அமைச்சகம் இதற்கான பரிந்துரையை மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. மத்திய மந்திரி சபை ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் வயதானவர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறைக்கு வந்து விடும்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளும் அதே அளவு பணத்தை ஒதுக்கீடு செய்தால் வயதானவர்கள் கூடுதல் பலன் பெறுவார்கள்.
கடந்த 1991–ம் ஆண்டு இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் எண்ணிக்கை 5.7 கோடியாக இருந்தது. 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 10.4 கோடியாக உயர்ந்தது.
2026–ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் 80 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களாக இருப்பார்கள் என்று ஐ.நா.சபை கணித்துள்ளது. இதையடுத்தே வயதானவர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment