Search This Blog

Friday, 29 November 2013

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு டிசம்பர் 2ல் தொடக்கம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு டிசம்பர் 2ல் தொடக்கம்

சென்னை: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான பிரதான எழுத்து தேர்வு டிசம்பர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
இந்திய சிவில் சர்வீஸ் பதவிகளான ஐஎப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், உள்ளிட்ட உயர்பதவிகளில் புதிய நபர்களை தேர்வு செய்வதற்கான முதன்மை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடந்தது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பிரதான எழுத்து தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 950 பேருக்கான பிரதான எழுத்து தேர்வு சென்னையில் நடத்தப்படுகிறது. சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, ராணிமேரி கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான எழுத்து தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் அனுப்பும் பணி தேர்வுத் துறையில் தொடங்கியுள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவோர் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment