Search This Blog

Sunday, 10 November 2013

ஜப்பானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரயில்கள் நிறுத்தம்

ஜப்பானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரயில்கள் நிறுத்தம்

டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக புல்லட் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக டோக்கியோ உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவிற்கு வந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் வடமேற்கில் உள்ள இப்ராகி மாகாணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் எதிரொலியாக டோக்கியோவில் இருந்து ஜப்பானின் வடக்கு பகுதிக்கு செல்லும் புல்லட் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், விமானப் போக்குவரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப் படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தின் சேதார விவகாரம் குறித்து தெரியவில்லை. நில நடுக்கம ஏற்பட்ட பகுதியில் தான் ஏற்கெனவே பூகம்பத்தில் பாதித்த புரூஷிமா அணுஉலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment