அழுதுக்கொண்டே இருந்ததால் விற்பனைக்கு விடப்பட்ட குழந்தை
பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை போட்டு இணையத்தில் விற்பனை செய்ய முயற்சிசெய்த நபரை பொலிசார் தேடிவருகின்றனர்.
உலகெங்கும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற இணைய விற்பனை நிறுவனத்தின் இணையதளத்தில், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை போட்டு அதனருகில், ´இது நிறைய அழுதுக்கொண்டே இருக்கிறது. இதனால் என்னால் தூங்க முடியவில்லை. நான் வேலை செய்தால்தான் உயிர்வாழமுடியும்´ எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், இக்குழந்தையை 267 பவுண்டுகளுக்கு விற்பனை செய்வதாகவும், விருப்பமுடையவர்கள் தொடர்புக்கொள்ள ஒரு தொலைபேசி எண்ணும் பெயரும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் அதன் இணையதளத்திலிருந்து நீக்குவதற்கு முன்பு அது 12 மணி நேரம் மக்களின் பார்வைக்கு இருந்ததாக தெரிகிறது.
ஒரு குழந்தையை இவ்வாறு விற்பனை செய்வது குற்றமாக கருதப்படுவதால் இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டவர் யார் என்பது குறித்து பிரேசில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இக்குற்றத்தை செய்தவர் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment