Search This Blog

Saturday, 28 December 2013

புதுச்சேரி பலாத்கார பயங்கரம்.. 2 குற்றவாளிகள் ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள்!

புதுச்சேரி பலாத்கார பயங்கரம்.. 2 குற்றவாளிகள் ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள்!

காரைக்கால்: திருவாரூரைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணை புதுச்சேரியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதாகியுள்ள 12 பேரில் 2 பேர் ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதில் நாசர் என்பவர், திமுக எம்.எல்.ஏ. நஜீமின் உறவினர் என்று தெரிகிறது. இந்த நாசர், கடந்த 1999ம் ஆண்டிலேயே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவராம். ஆனால் பின்னர் அப்பீலுக்குப் பின்னர் இந்தத் தண்டனை 18 மாதமாக குறைக்கப்பட்டதாம்.
புதுச்சேரிக்கு தனது தோழி மற்றும் அவரது காதலருடன் பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா வந்திருந்தபோதுதான் இந்த கொடுமையை சந்திக்க நேர்ந்தது. அடுத்தடுத்து இரண்டு குழுக்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்வது தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் மூண்டபோது ரோந்து போலீஸாரிடம் அவர்கள் சிக்கினர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 15 பேர் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் 12 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
முதலில் 3 பேர் சேர்ந்து அப்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விடுவித்துள்ளனர். பின்னர் இன்னொரு குழு வந்து அவரை பலாத்காரம் செய்து சீரழித்து விட்டது.
கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த மனித மிருகங்களிடம் சிக்கித் தவித்துள்ளார் அப்பெண்.

No comments:

Post a Comment