Search This Blog

Monday, 16 December 2013

ஏமாற்றி சீரழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்த கான்ஸ்டபிள்: தூக்கில் தொங்கிய சிறுமி

ஏமாற்றி சீரழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்த கான்ஸ்டபிள்: தூக்கில் தொங்கிய சிறுமி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கான்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள யூசுப்குடாவைச் சேர்ந்த ஏட்டுவுக்கு 17 வயதில் மகள் இருந்தார். அவர் கொண்டபூரில் உள்ள ஆந்திர பிரதேச மாநில காவல் துறையின் 8வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக உள்ள சதீஷ் ராம்(27) என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார்.
சதீஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உறவு வைத்துள்ளார். இந்நிலையில் சதீஷ் அந்த சிறுமிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அண்மையில் ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி தனது தாயிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். சதீஷால் தான் கர்ப்பமானதையும், கருவை கலைத்ததையும் தெரிவித்துள்ளார். பின்னர் கடந்த 12ம் தேதி இரவு 9.30 மணிக்கு அவர் சதீஷை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே நேராக வீட்டுக்கு வந்து இரவு 11.10 மணிக்கு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் சதீஷ் ராமை நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment