கூரியரில் வந்த பாம்பு: பார்சலை பிரித்து தெறித்தோடிய குடும்பம்
டெல்லி: பழைய டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு வந்த பரிசு பார்சலை திறந்து பார்த்தபோது அதில் பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பழைய டெல்லியில் உள்ள சாந்தினி மஹால் அருகே உள்ள பட்டோடி ஹவுஸில் வசித்து வருபவர் முகமது காமில். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு கூரியர் மூலம் பரிசு பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் காமிலின் மைத்துனி பெயர் இருந்து. பார்சலை பார்த்த காமிலுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் பார்சலை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று பிரித்தார்.
பார்சலை பிரித்தபோது அதில் இருந்து கருப்புத் தலையுடன் ஒரு பெரிய பாம்பு சீறிக் கொண்டு வந்தது. இதை பார்த்து பயந்து போன அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வனவிலங்கு அதிகாரிகளுடன் வந்து பாம்பை பிடித்துச் சென்றனர்.
அழிந்து கொண்டிருக்கும் வகையைச் சேர்ந்த பாம்பை பார்சலில் அனுப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment