பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாவும் நேற்று நள்ளிரவு உயர்த்தப்பட்டது.பெட்ரோல், டீசல் டீலர்களின் கமிஷனை நிர்ணயம் செய்யும்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அது அளித்த பரிந்துரையின்படி டீசலுக்கான கமிஷன் நேற்று கிலோ லிட்டருக்கு 1,089 உயர்த்தப்பட்டது. அதாவது லிட்டருக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது 57.32 ஆனது.இதேபோல் பெட்ரோல் கமிஷனை லிட்டருக்கு 21 பைசா உயர்த்தும்படியும் ரூபாய் மதிப்பு குறைந்ததால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 20 பைசா உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு லிட்டருக்கு 41 பைசா உயர்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை வரி சேர்த்து 74.71க்கு விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment