Search This Blog

Thursday, 12 December 2013

பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜி! - நரேந்திர மோடி

பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜி! - நரேந்திர மோடி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ரஜினியும் நண்பர்கள். மோடியின் ஒவ்வொரு பிறந்த நாளிலும், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் தவறாமல் வாழ்த்துவார் ரஜினி.
ரஜினி உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரைப் பார்க்க யாருக்குமே அனுமதி தரப்படவில்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதும் உண்டு.
கடந்த ஆண்டு 12.12.12 ல் ரஜினி பிறந்த நாள் வந்தது. இந்த விசேஷ நாளில் அனைவரையும் முந்திக்கொண்டு ரஜினிக்கு வாழ்த்து சொன்னார் மோடி.
இந்த ஆண்டும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்தில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்தோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலையிலேயே அவர் ரஜினிக்கு போன் மூலமும் வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment