Search This Blog

Friday, 24 January 2014

டாஸ்மாக் ஊழியர்கள் பிப்.18ல் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் பிப்.18ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: இஎஸ்ஐ, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிப். 18ல் டாஸ் மாக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பணி நிரந்தரம் செய்யவேண் டும். டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மெஷின் திட்டம் நடைமுறைப்படுத்துவதை வரவேற்பதுடன், ஊழியர்களுக்கு கேரள மாநிலத்தில் வழங்கப்படுவதைப்போல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் ஊழியர் களுக்கு இஎஸ்ஐ திட்டம் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள்நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 18ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment