Search This Blog

Friday, 17 January 2014

எதற்கும் அஞ்சாத இந்திரா காந்தியையே 'அச்சுறுத்திய' சுசித்ரா சென்...!

எதற்கும் அஞ்சாத இந்திரா காந்தியையே 'அச்சுறுத்திய' சுசித்ரா சென்...!

கொல்கத்தா: எதற்குமே அஞ்சாதவரான இந்திரா காந்தியே மறைந்த நடிகை சுசித்ரா சென்னின் ஆந்தி படதால் டென்ஷனாகி விட்டார். காரணம், அப்படத்தின் கதை அப்படி.
ஒட்டுமொத்த பெங்காலித் திரையுலகமும், சுசித்ரா சென்னின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தநிலையில் சுசித்ரா சென் குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன.
அதில் ஒன்றுதான் சுசித்ராவின் ஆந்தி திரைப்படம் குறித்தது. பெங்காலி நடிகையான சுசித்ரா இந்தியில் நடித்த படம்தான் ஆந்தி. இந்தப் படத்தை பிரபல பாடலாசிரியர் குல்ஸார் இயக்கியிருந்தார். 1975ல் வெளியான படம் இது.

இது ஒரு அரசியல் கதைப் பின்னணியிலானது. மிகப் பெரிய ஹிட் ஆன படமும் கூட. இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதை உறுதி்ப்படுத்துவது போல, படத்தின் திரையீட்டுக்கு முன்பு வெளியான போஸ்டர்களில் உங்கள் பிரதமரின் உண்மையா்ன வாழ்க்கையைப் பாருங்கள் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று பேச்சு கிளம்பியதால் படத்திற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. அப்போது மிசா காலம் வேறு. இந்தப் படத்தை பார்த்து கருத்துச் சொல்லுமாறு பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டிருந்தார். அந்த அளவுக்கு அந்தப் படம் இந்திரா காந்தியை டென்ஷனாக்கி விட்டது.
பின்னர் 1977ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியுற்றார். ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. டிவியில் ஒளிபரப்பாகியது.

No comments:

Post a Comment