நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசு குறைப்புசெய்திகள்
நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று, ‘தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின்’ விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பண்ணையாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலையில் 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 320 காசில் இருந்து 310 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.47, ஒரு கிலோ கறிக்கோழி ரூ.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment