Search This Blog

Sunday, 23 February 2014

வணிகர்களின் ஓட்டு யாருக்கு ?மே. 5 ல் திருநெல்வேலி மாநாட்டில் முடிவு

வணிகர்களின் ஓட்டு யாருக்கு ?மே. 5 ல் திருநெல்வேலி மாநாட்டில் முடிவு

தூத்துக்குடி : வணிகர்களின் ஓட்டு யாருக்கு , என்பதை திருநெல்வேலியில் மே.5 ல் நடக்கும் 31 வது வணிகர்கள் மாநாட்டில் முடிவு தெரிவிக்கப்படும், என வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். தூத்துக்குடியில் மத்திய வர்த்தகர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசியதாவது: திருநெல்வேலியில் 31 வது வணிகர்கள் சங்க மாநாடு மே. 5 ல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய மத்திய அரசு சில்லரை வர்த்தகத்திலும், சிறு தொழிலகளிலும் அந்நிய முதலீடு உருவாக தவறான பொருளாதார கொள்கைகள் தான் காரணம். உலக வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் சங்கம் எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. இது வரை தேர்தலில் யாருக்கும் ஆதரவும் தெரிவித்ததில்லை. நெல்லை மாநாட்டில் வணிகர்களை பாதுகாக்கும், கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் உறுதியாக இருக்கும் கட்சிக்கு வணிகர்கள் ஓட்டுபோட ஆதரவளிக்கும், முடிவு எடுக்கப்படும், என அவர் பேசினார். உடன் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பாஸ்கரன், நடராஜன், சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment