அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை உடனடியாக பணி நிரவல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி : தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, உடனடியாக பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உதவி பெறும் உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், என்ற விதிதத்திற்கு மேல் உள்ளவர்கள் உபரி ஆசிரியர்கள்.01.08.13 ம் நாள் நிலவரப்படி ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில், உபரியாக உள்ளனர். அரசாணை 525 ன் படி உபரியாக உள்ள ஆசிரியர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள உரிய பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். உதவி பெறும் பள்ளியின் செயலாளர்கள் இவர்களை உடனடியாக பணி ஏற்கும் வகையில், தற்போதைய பணியிடத்தில் இருந்து விடுவிக்கும்படி பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வும், கூடிய விரைவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடக்கவுள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் இறுதிக்கட்டமாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் உடனடியாக மாறுதல் செய்யப்பட்டால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுத் தேர்வு முடிந்த பின்னரோ,கல்வி ஆண்டின் முதலில் பணிநிரவல் செய்ய வேண்டும், என உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment