Search This Blog

Sunday, 2 March 2014

முதல்வர் "ஜெ' பிரசாரம் துவக்கும் அன்று அனைத்து தொகுதியிலும் பிரசாரம் துவக்கம் : அமைச்சர் சண்முகநாதன்

முதல்வர் "ஜெ' பிரசாரம் துவக்கும் அன்று அனைத்து தொகுதியிலும் பிரசாரம் துவக்கம் : அமைச்சர் சண்முகநாதன்

தூத்துக்குடி: ""தமிழகத்தில் மார்ச் 3 ல் முதல்வர் "ஜெ' பிரசாரம் துவங்கிய பின்பு அதே நேரத்தில் 40 லோக்சபா தொகுதியிலும் பிரசாரம் துவக்கப்படவுள்ளது,'' என சுற்றுலாத்துறை அமைசர்சர் சண்முகநாதன் பேசினார். தூத்துக்குடியில் அ.தி.மு.க., வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி அறிவிக்கப்பட்ட பின்பு, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில்,"" தூத்துக்குடியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர் ஜி வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும். காஞ்சிபுரத்தில் முதல்வர் "ஜெ' பிரசாரத்தை துவக்குகிறார். அதே நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் உட்பட 40 லோக்சபா தொகுதிகளிலும் பிரசாரம் துவக்கப்படவுள்ளது. முதலில் தலைவர்கள் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவிப்பார். அதன் பின்பு முக்கிய சமுதாய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும். அதன் பின்பு வேட்பாளர் பொது மக்களிடம் ஓட்டு கேட்பார். அதில் திராள நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தை கண்டு எதிர் வேட்பாளர்கள் சீட்டே வேண்டாம், என ஓட வேண்டும். இங்கு ம.தி.மு.க., வேட்பாளர் ஜோயல், கட்டப்பஞ்சாயத்து செய்பவர், தி.மு.க.,வேட்பாளராக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன். இவரது குடும்பத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும். மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலானோர், உள்ளாட்சி, கூட்டுறவு உட்பட ஏதாவது ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பில் இருப்பவர்கள். ஓட்டு கேட்பது எளிது. மக்களிடையே எதிர்ப்பு இல்லை. நீங்கள் உழைத்தால் மட்டும் போதுமானது, என அவர் பேசினார்.

நிர்வாகிகள் கூட்டமில்லை விறுவிறுப்பும் இல்லை

*வேட்பாளர் அறிவிக்கப்பட்டு முதல் கூட்டம் என்பதால் நிர்வாகிகள் விறுவிறுப்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை.

* சில நிர்வாகிகளை மேடையில் பேச அழைத்தும் பேச மறுத்துவிட்டனர்.

* வேட்பாளருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டது.

* "ஜெ' பிரசாரத்தை துவக்கும் வரை வேட்பாளர் மேடையில் பேசவோ, பிரசாரம் செய்யவோ மாட்டார், என தெரிவித்தனர்.

* கோஷ்டி அரசியல் இதிலும் அதிகம் காணப்பட்டது. பல நிர்வாகிகள் அமைச்சர், பெயரை மட்டுமே உச்சரித்தனர். முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பெயரே உச்சரிக்கவில்லை.

* பிளக்ஸ் பேனரில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், என பிரிண்ட் செய்யப்பட்டிருந்தாலும், "பாராளுமன்ற தொகுதி'

வெள்ளை பேப்பரில் மறைத்து விட்டனர்.

*இதே நிலை பிரசாரத்தில் நீடித்தால் அ.தி.மு.க., வெற்றி பெறுவது மிக கடினமாக இருக்கும், என நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.

* கோவில்பட்டி எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

*ராஜ்ய சபா எம்.பி., யாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, அமைச்சர் உட்பட அனைவரும் வந்து கூட்டத்தை துவக்கிய பின்னரே 10 நிமிடங்கள் தாமதமாக வந்து கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment