துவங்கியது தேர்தல் திருவிழா : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சை துவக்கினார்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி பிரசாரத்தை துவக்கினார். தூத்துக்குடியில் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி, அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் கோவில்பட்டி ராஜூ, விளாத்திகுளம் மார்க்கண்டேயன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தனர். வெஸ்ட் காட்டன் ரோட்டில் குரூஸ் பெர்ணான்டஸ் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார். ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி பேசியதாவது: 30 ஆண்டுகளாக கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்த என்னை வேட்பாளராக முதல்வர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., வில் அடி மட்டத்தொண்டனுக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதல்வர் இருக்கும் திசை நோக்கி வணங்கி எனது பிரசாரத்தை துவக்குகிறேன். மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கின்றனர். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க, காங்., கட்சி தான். நமது முதல்வர் நிர்வாகத்திறமை மிக்கவர். அவர் பாரத பிரதமராகிட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வை வெற்றி பெற செய்ய வேண்டும். "ஜெ' பிரதமரானால் தமிழகம் முன்னேற்றம் அடையும். தூத்துக்குடியில் போட்டியிடும் எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும், என பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன், என அவர் பேசினார்.
No comments:
Post a Comment