மலேசிய விமானத்தில் பயணித்த ஈரானியர் புகலிடம் தேடி வந்தவர்- போலீஸ்
கோலாலம்பூர்: காணாமல் போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இரு ஈரானியர்களில் ஒருவர் புகலிடம் கோரி ஜெர்மனி செல்லும் வழியில் மலேசியாவுக்கு வந்தவர் என்று தெரிய வந்துள்ளதாக மலேசிய போலீஸார் கூறியுள்ளனர்.
அந்த நபரின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த நபரின் பெயர்தான் பூரியா நூர் முகம்மது ஆகும். இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இவர் ஜெர்மனி நாட்டில் புகலிடம் கோரி தஞ்சமடைவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நபரின் தாயார் ஏற்னவே ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்குப் போய் விட்டார். அங்கு அவர் காத்துள்ளார். அவருடன் அதிகாரிகள் பேசிய பிறகே இந்த நபரின் அடையாளம் குறித்துத் தெரிய வந்தது.
No comments:
Post a Comment