4 ரன்களில் ரஹானேவை இழந்தது இந்தியா
மிர்பூர்: டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
முதலில் பேட் செய்து வரும் இந்தியா 2வது ஓவரில் தனது முதல் விக்கெட்டாக அஜிங்கியா ரஹானேவை இழந்தது. 3 ரன்களில் போல்ட் ஆனார் ரஹானே.
முன்னதாக இலங்கை அணி டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழை நின்று ஆடுகளம் விளையாடத் தயார் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. இதில் இலங்கை கேப்டன் லசித் மலிங்கா டாஸ் வென்றார்.
இதையடுத்து தனது அணி முதலில் பீல்டிங் செய்யும் என்று அவர் அறிவித்தார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
No comments:
Post a Comment