Search This Blog

Saturday, 19 April 2014

தென்காசி அருகே 96 பாட்டில் கடத்திய 2 பேர் கைது

தென்காசி அருகே 96 பாட்டில் கடத்திய 2 பேர் கைது

தென்காசி: தேர்தலுக்காக மது பாட்டில் கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி அருகேயுள்ள சாம்பவர் வடகரை போலீஸ் சரகத்திற்குட்பட்ட வேலாயுதபுரம் பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது ஒரு பயணிகள் ஆட்டோ வேகமாக வந்தது.அதனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஆட்டோவில் 96 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களைபிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் இடைகால் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கி கொண்டுபோய் தேர்தல் நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுசெல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நாதன், ஆட்டோ டிரைவர் தங்கவேல் ஆகியோரை கைது செய்து, மதுப் பாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment