Search This Blog

Friday, 19 April 2013

1 மதிப்பெண்ணால் சதம் வாய்ப்பு பாதிப்பு எஸ்எஸ்எல்சி அறிவியல் ''கீ ஆன்சரில்'' குழப்பம்

1 மதிப்பெண்ணால் சதம் வாய்ப்பு பாதிப்பு
எஸ்எஸ்எல்சி அறிவியல் ''கீ ஆன்சரில்'' குழப்பம்

    நெல்லை : தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணி தற்போது தமிழகம் முழுவதும் அந்தந்த கல்வி மாவட்ட மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வில் அறிவியல் பாடத்திற்கு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் பக்கம் எண் 4 வினா எண் 14ல் இடம் பெற்ற வினா மற்றும் ஏதேனும் ஒரு பதிலை அளிக்குமாறு கூறி வழங்கப்பட்ட  விடைகள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு மதிப்பெண் வினாவாக இது இருந்தாலும் கேள்விக்கு சம்பந்தமில்லாத விடையாக தரப்பட்டு தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது. இதனால் ஆங்கில வழி கல்வி மாணவர்கள் ஒரு மதிப்பெண்ணை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடைதிருத்த வழி காட்டியில் (கீ ஆன்சர்) 2 விடைகளை குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதி இருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விளக்கத்தை 10ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி அறிவியல் ஆசிரியர்கள் சிலரும், கல்வி நிறுவனத்தினரும் ஏற்கவில்லை.

காரணம் வழிகாட்டி விடையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 விடைகளில் ஒரு விடை மட்டுமே வினாத்தாளில் உள்ளது. மற்றொரு விடை இல்லை. எனவே 14ம் எண் கேள்வியை மாணவர்கள் எழுதி இருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாகும். அப்படி வழங்கினால்தான் 100 மதிப்பெண் குறிக்கோளுடன் எழுதும் மாணவர்களுக்கு பலன் கிடைக்கும். அல்லது இந்த ஒரு கேள்வியால் ஆங்கில வழி கல்வி மாணவர்கள் பலர் சதம் எடுக்கும் வாய்ப்பை இழக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கல்வித்துறையின் கவனத்திற்கு பேக்ஸ்  மூலம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment