ஒயிட்னர் தயாரிக்க தடை
கருத்துகள்
சிவகங்கை : மை பேனாவால் எழுதும் போது ஏற்படும் பிழையை அழிப்பதற்காக ஒயிட்னர், இங்க் ரிமூவர் பயன்படுத்தப்படுகிறது. இவை ஸ்டேஷனரி கடைகளில் எளிதில் கிடைக்கின்றன. இளைஞர்களும், மாணவர்களும் இவற்றை போதை பொருட்களாகவும் பயன்படுத்துகின்றனர். ஒயிட்னரை நேரடியாகவும், கைக்குட்டை களில் தேய்த்து முகர்ந்தும் போதை ஏற்றி கொள்கின்றனர்.
ஒயிட்னர் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ரசாயன மை அழிக்கும் திரவம் (ஒயிட் னர்), நகப்பூச்சு அழிக்கும் திரவத்தை விற்க தடை செய்ய வேண்டும் என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகமும் அறிவுறுத்தியது. இதையடுத்து ஒயிட்னர் பாட்டில்களை தயாரிக்க மத்திய அரசு தடை விதித் துள்ளது. அந்த உத்தரவில், ‘ரசாயன மை அழிக்கும் திரவம், நகப்பூச்சு அழிக்கும் திரவத்தை பாட்டில்களில் தயார் செய்யும் நிறுவனங்கள் அதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். சில்லரை விற்பனை நிலையங்களும் அவற்றை விற்பனை செய்ய கூடாது. ஆனால் அவற்றை பேனா போன்ற சிறிய உபகரணங்களில் அடைத்து,
அவற்றின் மேல் திரவத்தை நுகர்தல் மற்றும் உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் எழுதி தயாரிக்கலாம். சிறிய அளவில் மட்டுமே திரவம் வெளியேறும் வகையில் அந்த உபகரணம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment