கூடங்குளம் அணு உலை முற்றுகை குமரியிலிருந்து பேரணி செல்ல முயன்ற 146 பேர் கைது
கன்னியாகுமரி: கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மூட வேண்டும். அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 20ம் தேதி குமரியில் இருந்து ஊர்வலமாக கூடங்குளம் சென்று அணுஉலை முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று காந்திமண்டபம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கொளத்தூர் மணி தலைமையில் 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதில் 36 பெண்கள் உள்பட 146 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment