Search This Blog

Friday, 26 April 2013

மலையில் இருந்து டிராக்டர் உருண்டு 20 பேர் பலி


மலையில் இருந்து டிராக்டர் உருண்டு 20 பேர் பலி

ராயகடா : ஒடிசாவில் ராயகடா மாவட்டத்தில் ஹடாகுமா மலைப்பகுதியில் நேற்று காலை டிராக்டர் ஒன்றில் திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்தது. டிராக்டரில் 60 பேர் இருந்தனர். ஒரு வளைவில் திரும்பியபோது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயமடைந்த 10 பேர் ராயகடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment