Search This Blog

Wednesday, 17 April 2013

திமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது

திமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது

சென்னை: 4 வது முறையாக வெளியேற்றப்பட்டதால் தொடர் முழுவதும் திமுக பங்கேற்க முடியாது. 2 முறை வெளியேற்றப்பட்டாலே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்பது விதி என்றும், முதல்வர் பரிந்துரையாலேயே 3 வது முறையாக வெளியேற்றப்பட்டபோது அனுமதி வழங்கப்பட்டது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் 4 ஆவது முறையாக கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர். அரக்கோணம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவி பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்துக்கு சம்பந்தி என சிலர் தம்பட்டம் அடிப்பதாக ரவி அவையில் பேசினார். எம்எல்ஏ ரவியின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பேரவையில் திமுகவினர் ஒட்டு மொத்தமாக எழுந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

திமுக குற்றச்சாட்டு
சபாநாயகரின் சர்வாதிகாரப் போக்கை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது என்று நு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதிர்க் கட்சிகள் அவைக்கு வரக்கூடாது என்று ஆளுங்கட்சியினர் எண்ணுகின்றனர். மீறி அவைக்கு வந்தால் சபாநாயகரால் வெளியேற்றப்படுவதாகவும் அவர் குடர் சாட்டியுள்ளார். முதல்வரைப் புகழ்ந்து பேசுவதற்கு மட்டுமே பேரவையில் அனுமதி தரப்படுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment