விஏஓ 5ம் கட்ட கவுன்சலிங் 102 பேரில் பாதிக்கு மேல் ஆப்சென்ட்
சென்னை : விஏஓ 5ம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நேற்று கலந்து கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் 1,870 விஏஓ காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த 30.9.2012ல் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கவுன்சலிங் நடத்தப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதுவரை 4 கட்ட கவுன்சலிங் நடந்து முடிந்துள்ளது.
5ம் கட்ட கவுன்சலிங் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் பங்கேற்க 102 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். பாதிக்கு மேற்பட்டவர்கள் வராததால் கவுன்சலிங் நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.
விஏஓ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பலர் குரூப் 2 உள்ளிட்ட அரசு தேர்வுகளில் வெற்றி பெற்றதால் அந்த வேலை யில் சேர்ந்து விட்டனர். இதனால் இதற்கான கவுன்சலிங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment