Search This Blog

Thursday, 25 April 2013

திண்டிவனம் அருகே மக்கள், பா.ம,க-வினருக்கு இடையே மோதல் பேருந்து, வீடு மற்றும் கடைகளுக்கு தீ வைப்பு : போலீஸ் துப்பாக்கி சூடு

திண்டிவனம் அருகே மக்கள், பா.ம,க-வினருக்கு இடையே மோதல்
பேருந்து, வீடு மற்றும் கடைகளுக்கு தீ வைப்பு : போலீஸ் துப்பாக்கி சூடு

     திண்டிவனம்: சித்திரை முழுநிலவு விழாவிற்கு சென்ற பா.ம.க கட்சியினருக்கும், மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. திண்டிவனம் அருகே மரக்காணத்தில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் 5 பேருந்துகள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்துகளில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த கலவரத்தில் படுகாயம் அடைந்தனர். பேருந்துகள் எரிக்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கலவரத்தை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மரக்காணத்தில் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை விரட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment