Search This Blog

Saturday, 27 April 2013

தென்காசியில் மர்ம காய்ச்சல் ஏராளமானோர் பாதிப்பு

தென்காசியில் மர்ம காய்ச்சல் ஏராளமானோர் பாதிப்பு

தென்காசி : நெல்லை மாவட்டம் கடையநல்லூர், தென்காசி பகுதியில் சிங்கிலிபட்டி சிதம்பராபேரி, பூலாங்குளம், கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் காய்ச்சல், இருமல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற தென்காசி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
 கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதனால் காலை வேளையில் மருத்துவமனை வளாகத்தில் போலீசாரை வைத்து கூட்டத்தை  கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகமானதற்கு அந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் சமீப காலமாக நிறுத்தப்பட்டு விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிப்பதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். தென்காசி அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலை தவிர்க்க புறநோயாளிகள் பிரிவுக்கு தனியாக கட்டிடம் கட்ட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment