Search This Blog

Friday, 19 April 2013

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை

புதுடெல்லி: நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ளது. எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் பட்ஜெட் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத் தொடர் வரும் திங்கட் கிழமை துவங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகிய விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன எனத் தெரிகிறது. டெல்லியில் நேற்று கூடிய இடது சாரி கட்சிகள் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளன. இந்த நிலையில் எதிர்க் கட்சிகளை நாளை மறுநாள் கூட உள்ள நாடாளுமன்றத்தில் எப்படி சமாளிப்பது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கியத் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐ அறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சிபிஐக்கு உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்ட அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்ய பாரதீய ஜனதா வலியுறுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment