Search This Blog

Tuesday, 7 May 2013

நாளை காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

நாளை காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள தேர்வுத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று கடந்த 27-ந் தேதி அரசு அறிவித்தது.
இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட உடனேயே http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.nic.in, http://www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையத்தில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment