எரிவாயு விலையை5 சதவீதம் உயர்த்த திட்டம்
புதுடில்லி:மத்திய அரசு, எரிவாயு விலையை, ஆண்டுதோறும், 5 சதவீதம் என, 8 ஆண்டுகளுக்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், சர்வதேச விலைக்கு நிகராக, உள்நாட்டில் எரிவாயு விலை இருக்கும்.
ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இது தவிர்த்து, உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில், 10 சதவீதத்தை, இறக்குமதி விலை அடிப்படையில், சந்தையில் விற்பது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம், முதலாவதாக, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில், எரிவாயு விலை ஒரே சீராக இருக்கும். இரண்டாவதாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில், மின்சாரம், உரம் போன்ற முன்னுரிமை துறைகளுக்கு, மொத்த எரிவாயு உற்பத்தியில், 50 சதவீதத்தை வழங்க முடியும்.
மூன்றாவதாக, சர்வதேச எரிவாயு விலை அடிப்படையில், அவற்றை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், நீண்ட கால செயல் திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment