பரதேசி கங்காணி கைவசம் ஆறு படங்கள்
பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த கங்காணியை யாராலும் மறக்க முடியாது. ஜேடி-ஜெர்ரி சினிமா இயக்குனர்கள்.. பிரபலமான விளம்பரங்கள் இவர்களின் கைவண்ணத்தில் உருவானவைதான். இவ்விருவர்களில் கங்காணியாக நடித்திருந்தவர் ஜெர்ரி.
இயக்குனர் ஷங்கர் ‘சிவாஜி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க, விருப்பமில்லை என்று மறுத்திருக்கிறார். அதே போல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆன்ந்தும் நடிக்க அழைக்க, வேண்டாம் என்றிருக்கிறார்.
அவர் மட்டுமில்லாமல் இவரின் நண்பர்களான ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், திரு, நடிகர் ம்ம்முட்டி போன்றவர்களும் நடிக்கலாமே என்று கேட்க, ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பாலா கேட்க, மறுக்க முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டு இன்று அனைவருக்கும் அறிமுகமான நடிகராகி விட்டார்.
இப்போது இவரின் கைவசம் பிரபலமான இயக்குனர்களின் ஆறு படங்களில் நடிக்கிறார் ஜெர்ரி.
No comments:
Post a Comment