Search This Blog

Wednesday, 1 May 2013

எங்கே விவசாயி

எங்கே விவசாயி

முதன்முறையாக விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 1 கோடி பேர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இது. ஆதாயம் தரும் தொழிலாக இருந்த விவசாயம் மாறிவிட்டது. எத்தனை இடர்பாடுகள் உண்டோ அத்தனையும¢ இதில் இருக்கிறது. மழை பெய்தாலும் பிரச்னை, பெய்யா விட்டாலும் பிரச்னை, காற்றடித்தாலும¢ பிரச்னை, அடிக்காவிட்டாலும் பிரச்னை என பல இடையூறுகள். இத்தனையும் தாண்டி லாபம் பார்ப்பது கஷ்டமான காரியம். அதனால்தான் விவசாயிகள் பலர் நிலங்களை விற்றுவிட்டு விவசாயத்துக்கு முழுக்குப்போட்டு வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலைமைதான். ஆனால் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக இருந்ததால், விவசாயத்தை கைவிடுவோர் எண்ணிக்கை வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது ம.தொ. பெருக்கம் குறைந்திருப்பதால் முதன்முறையாக விவசாயிகள் எண்ணிக்கை பெரிதும் குறைந்திருக்கிறது.

விவசாயிகளின் எண்ணிக்கை 11.90 கோடியாக உள்ளது. தொழிலாளர்கள் எண்ணிக்கையில் விவசாயிக்கு இரண்டாவது இடம். 2001ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 7 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரம் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை 26.5 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 14 கோடியே 40 லட்சம் பேர். சொந்த விவசாயம் செய்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு, விவசாயக் கூலிகளாக மாறியதால் இந்த நிலைமை. விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் சேர்த்து மொத்தம் 26.30 கோடிப் பேர் இன்னமும் மண்ணையும் மழையையும் நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு பக்கம் விவசாய நிலம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் நஞ்சையும் புஞ்சையும் வீட்டடி மனைகளாக மாறுகின்றன. இன்னொரு புறம்  கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பு குறைந்து தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வருமானம் குறையும். ஏற்கனவே விவசாய கூலித் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு போவது அதிகமாக உள்ளது. இந்த வேகம் இன்னும் கூடும். அப்போது ந¤லத்திலும் களத்து மேட்டிலும் இயந்திரங்களை மட்டுமே காண முடியும். மக்கள் தொகை குறைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கலாம். இந்தியாவுக்கு இருக்காது.

"தங்களின் வருகைக்கு நன்றி"

No comments:

Post a Comment