Search This Blog

Wednesday, 1 May 2013

டெல்லி டெர்டேவில்ஸ் அணி அபார வெற்றி

டெல்லி டெர்டேவில்ஸ் அணி அபார வெற்றி

ராய்ப்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்சுடனான லீக் ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராய்ப்பூர், வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக பிஸ்லா, கேப்டன் கம்பீர் களமிறங்கினர். கம்பீர் (0) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேற கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அவரைத் தொடர்ந்து பிஸ்லா 4 ரன் எடுத்து உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடி நம்பிக்கை கொடுத்த யூசுப் பதான் 20 ரன் எடுத்து (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) மார்க்கெல் வேகத்தில் இர்பான் வசம் பிடிபட்டார். மார்கன் 10, காலிஸ் 12 ரன் எடுத்து அணிவகுப்பு நடத்த, நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்னுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

தேவபிரதா தாஸ் 18 ரன் எடுத்து நெஹ்ரா வேகத்தில் ஜாதவிடம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் பாட்டியா , நார்வால் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முயன்றது. நார்வால் 23 ரன் எடுத்து வெளியேறினார். நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. பாட்டியா 26, பிரெட் லீ 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய டேர்டெவில்ஸ் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது. வார்னர் அதிகபட்சமாக 62 ரன், சந்த் 37 ரன் குவித்தனர்.

"தங்களின் வருகைக்கு நன்றி"

No comments:

Post a Comment