Search This Blog

Sunday, 19 May 2013

கணவர் தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை

கணவர் தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை

 
  
திருவள்ளூர் : வயிற்று வலியால் துடித்த கணவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அதிர்ச்சியில், மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.திருவள்ளூர் அடுத்த, புன்னப்பாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பூங்காவனத்தின் மகன் மத்தேயூ என்கிற நட்சத்திரம், 75. இவரது மனைவி ஜோதி, 65. இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நட்சத்திரம், சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில், நேற்று மீண்டும் வயிற்று வலியால் துடித்தார். வலி தாங்க முடியாமல், வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.கணவர் தற்கொலை செய்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த மனைவி ஜோதியும், வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மகன் இசக்கியன் அளித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment