Search This Blog

Tuesday, 28 May 2013

சூதாட்ட புகார்: தோனிக்கு பி.சி.சி.ஐ.வாய்ப்பூட்டு

சூதாட்ட புகார்: தோனிக்கு பி.சி.சி.ஐ.வாய்ப்பூட்டு

 
 

  

                                  இந்திய அணி பங்கேற்கிறது. இது தொடர்பாக மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கூட்டத்தில் இந்திய அணியன் கேப்டன் தோனி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சவால் மிகுந்ததாக இருக்கும். தற்போது இந்திய அணி வலுவாக உள்ளது.அணியின் வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். துவக்க வீரர்கள் முதல் மத்திய ஆட்டக்காரர்கள் என அனைவரும் துடிப்புடன் விளையாட காத்திருக்கின்றனர். எனவே சாம்பியன் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார். சில நிமிடங்களில் பேட்டியை முடித்துக்கொண்டார் தோனி.

தோனிக்கு பி.சி.சி.ஐ.வாய்ப்பூட்டு
இதற்கிடையே பிரிமியர் கிரிக்கெட்டில்நடந்த சூதாட்டம் தொடர்பாக நிருபர்கள் இடைமறித்து தோனியை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறாமல் விருட்டென எழுந்து சென்றார். இது குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சூதாட்ட புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் எதையும் உளறி கொட்டக்கூடாது என தோனிக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பூட்டு போட்டுள்ளது.இதையடுத்து தான் அவர் பதில் கூறாமல் சென்றார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சூதாட்ட சர்ச்சை குறித்து தோனியிடம் கேள்வி கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சாம்பியன் கோப்பை போட்டிகள் துவங்க இருப்பதையொட்டி நாளை இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து செல்கின்றனர். மேலும் நடக்கவிருக்கும் சாம்பியன் கோப்பையில் இந்திய அணி இடம்பெறும் "ஏ" பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த அணியில் மேற்கிந்திய அணியும் இடம் பெறவுள்ளது. வரும் ஜூன் 6.,ம் தேதி நடை பெறவுள்ள முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் மோதவுள்ளது.

No comments:

Post a Comment