Search This Blog

Friday, 3 May 2013

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சூப்பர் வெற்றி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சூப்பர் வெற்றி

கொல்கத்தா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. ராயல்ஸ் தொடக்க வீரர்களாக வாட்சன், ரகானே களமிறங்கினர். ரகானே 6 ரன் எடுத்து சேனநாயகே பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

பாக்னர் 1 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா பந்துவீச்சில் கம்பீர் வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து, வாட்சனுடன் இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாட்சன் 35 ரன் எடுத்து சுனில் நரைன் சுழலில் எல்பிடபுள்யு ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த யாக்னிக் 10 ரன் எடுத்து சேனநாயகே பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ராயல்ஸ் 83 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், சாம்சன் & ஓவைஸ் ஷா இருவரும் அணியை மீட்க போராடினர். சாம்சன் 40 ரன் எடுத்து (36 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) பாட்டியா பந்துவீச்சில் காலிஸ் வசம் பிடிபட்டார். ஷா 24 ரன் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 17.2 ஓவரிலேயே 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பதான் 49 ரன்னும், கல்லீஸ் 39 ரன்னும் எடுத்தனர்.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment