ஸ்பாட் பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பேன்: தோனி
பர்மிங்ஹாம்: பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு உரிய
நேரத்தில் பதிலளிப்பதாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி
தெரிவித்துள்ளார்.
மினி உலகக்கோப்பை என்றழைக்கப்படும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி, அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பர்மிங்ஹாம் நகரில் நிருபர்களிடம் தோனி பேசினார். அப்போது அவர் சாம்பியன்ஸ் டிராபி குறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பதாகவும், ஸ்பாட் பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி., அமைப்பின் நிர்வாகிகளும், இது சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான நிருபர்கள் சந்திப்பு என்பதால் அது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நடந்து வரும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை தோனி பதிலளிக்காமல் மவுனம் காப்பது பல்வேறு தரப்பில் அவர் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பேட்டியில் கூறுகையில், ஸ்பாட் பிக்சிங் தொடர்பான கேள்விகளுக்கு நான் இந்திய மீடியாக்களிடம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அப்படியிருக்கையில் இங்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், உரிய நேரத்தில் இதுகுறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் பின்னர் தோனி கூறினார்.
இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பை மீட்டெடுக்க சாம்பியன்ஸ் டிராபி ஒரு நல்ல வாய்ப்பா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தோனி, இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பு ஒருபோதும் கெட்டுவிடவில்லை. இது குறித்து மேலும் நான் பேசினால், மற்றொரு நிருபரின் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டி வரும். எனவே உரிய நேரத்தில் உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என கூறினார்.

No comments:
Post a Comment