Search This Blog

Thursday, 30 May 2013

அங்கித் சவானுக்கு ஜாமின்

அங்கித் சவானுக்கு ஜாமின்


Ankeet Chavan has been granted conditional bail
 
         புதுடில்லி: அங்கித் சவான் திருமணத்துக்காக வரும் ஜூன் 6 வரை ஜாமின் வழங்கப்பட்டது.
பிரிமியர் தொடரில் "ஸ்பாட்-பிக்சிங்' செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் உள்ளிட்ட வீரர்களை டில்லி போலீசார் கடந்த மே 16ம் தேதி கைது செய்தனர். டில்லி லோதி காலனியில் உள்ள "ஸ்பெஷல்' பிரிவு போலீசார், 12 நாட்கள் விசாரணை நடத்தினர். 
இதனிடையே, அங்கித் சவானின் நிச்சயக்கப்பட்ட திருமணம் வரும் ஜூன் 2 ல் நடக்க இருந்தது. இதற்காக ஜாமின் கோரிய இவரது மனுவை கடந்த 29ம் தேதி நீதிபதி நிராகரித்தார். இதனால், சவான் திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.
நேற்று அங்கித் சவானின் ஜாமின் மனு மீதான விசாரணை மீண்டும் நடந்தது. விசாரணை முடிவில், சவான் திருமணத்துக்கு செல்வதற்காக, ஜூன் 6ம் தேதி வரை நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்






No comments:

Post a Comment