சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கு
முன்னாள் எம்.பி சஜன்குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : பிரதமர் இல்லம் நோக்கி சீக்கியர்கள் பேரணி
டெல்லி: சீக்கியருக்கு எதிரான கலவரவழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.சஜன்குமார் விடுவிக்கப்பட்டதற்கு சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை நோக்கி சீக்கிய அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். பிரதமர் இல்லம் நோக்கி ஊர்வலம் சென்ற சீக்கிய அமைப்பினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். 1984ல் டெல்லியில் சீக்கியர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டனர். 5 பேரை கொன்றதாக சஜன்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment