Search This Blog

Sunday, 5 May 2013

'கீரனின்' திருவிளையாடல்... 3 'கேட்ச்'சை கோட்டை விட்டு 'ஹாட்ரிக்' சாதனை!

'கீரனின்' திருவிளையாடல்... 3 'கேட்ச்'சை கோட்டை விட்டு 'ஹாட்ரிக்' சாதனை!

மும்பை: விக்கெட் வீழத்துவதில் ஹாட்ரிக் சாதனை படைப்பது சகஜம். ஆனால் கேட்ச்சை கோட்டை விடுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்து விட்டார் மும்பை இந்தியன்ஸின் கீரன் போலார்ட்.
மிட்சல் ஜான்சன் வீசிய ஓவரில் தொடர்ந்து 3 கேட்ச்களை மிஸ் செய்து மும்பை ரசிகர்களை அதிர வைத்தார் அவர்.
ஒரு கிரிக்கெட் போட்டியில், ஒரு பீல்டர், அடுத்தடுத்து 3 கேட்ச்களை தவற விட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு மிகப் பெரிய சாதனைதான். அதுவும் போட்டியின் முதல் ஓவரிலேயே இந்த திருவிளையாடலை நடத்தினார் கீரன்.
முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளில்தான் இந்தக் கூத்து நடந்தது. அதில் முதல் பந்தை சென்னையின் மைக்கேல் ஹஸ்ஸி அடித்தபோது அது கேட்ச் ஆக மாறக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை போலார்ட் தவற விட்டார். அடுத்த 2 பந்துகளும் கேட்ச் ஆகி போலார்டை நோக்கிப் போனபோதும் மீண்டும் மீண்டும் தவற விட்டார் போலார்ட்.
இதில் முதல் கேட்ச் ஆனது மிகவும் கடினமானது. எனவே அதைக் கூட சரி என்று விட்டு விடலாம். ஆனால் அடுத்த 2 கேட்ச்களும் நேராக போலார்ட் கைக்கே போனது. இருந்தும் அவர் தவற விட்டார். கடைசி கேட்ச்சை அவர் மிஸ் செய்தபோது பந்து அவரை காயப்படுத்தி விட்டது. இதனால் சிறிது நேரம் அவர் மைதானத்தை விட்டுவெளியேறினார்.
இருப்பினும் ஜான்சன் அடுத்த ஓவரை வீச வந்தபோது மீண்டும் பீல்டிங்கில் இறங்கினார் போலார்ட். அப்போது ஜான்சன் வீசிய முதல் பந்தை சுரேஷ் ரெய்னா தூக்கி அடிக்க பவுண்டரி லைனுக்கு வெகு அருகே மிகவும் சிரமப்பட்டு அந்த பந்தைப் பிடித்து தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார் போலார்ட்.
எளிமையான கேட்ச்களை கோட்டை விட்ட அவர் மிக மிக கடினமான கேட்ச்சைப் பிடித்தது மும்பை ரசிகர்களையும் குஷிப்படுத்த தவறவில்லை.
ஆனால் போலார்ட் செய்த தவறால் மும்பை இந்தியன்ஸுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் சொதப்பலாகி ஆடி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதே.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment