கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு: ராணுவ வீரர் கைது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்லூரி மாணவர்
கொன்று புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக மாணவரின் சகோதரரின் கணவரான
ராணுவவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சுப்பிரமணி (19). நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி 2 ஆம் ஆண்டு மாணவர். இவரது சகோதரி கார்த்திகாவை சமயநல்லூர் பகுதியில் உள்ள தச்சம்பத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஆறுமுகத்துக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளனர். அவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். கார்த்திகா தனியாக தச்சம்பத்தில் வசித்துவருகிறார்.
இந்தநிலையில் ஆறுமுகத்தின் சகோதரரான ராணுவவீரர் சுந்தரராஜனின் குழந்தைக்கு காதுகுத்தும் விழா நடைபெற்றது. இதற்காக ஆறுமுகம் தச்சம்பத்து வந்துள்ளார். அப்போது மாணவர் சுப்பிரமணியும் வந்துள்ளார். சுப்பிரமணி அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாகவும், நடவடிக்கை சரியில்லை எனவும் புகார் வருகிறது என்று கூறி ஆறுமுகம் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆறுமுகத்துக்கும், சுப்பிரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சுப்பிரமணியை ஆறுமுகம் கொலை செய்து தனது தச்சம்பத்து வீட்டில் உள்ள கழிப்பறை அருகே புதைத்துள்ளார். இதுதொடர்பாக சமயநல்லூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை நடைபெற்றுள்ளது. உடனே ராணுவவீரர் ஆறுமுகம் அப்பகுதி கிராமநிர்வாக அலுவலர் மூலம் போலீஸில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆறுமுகத்தைக் கைது செய்த போலீஸார் அவர் கூறியபடி தச்சம்பத்தில் கழிப்பறை அருகே புதைக்கப்பட்டிருந்த மாணவர் சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment