Search This Blog

Monday, 27 May 2013

தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் மூன்றாவதுஅணி : சந்திரபாபு நாயுடு ஆரூடம்

தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் மூன்றாவதுஅணி : சந்திரபாபு நாயுடு ஆரூடம்
 
 
                         
   ஐதராபாத்:
                          மூன்றாவது அணி தான் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார். தெலுங்கு தேச கட்சியின் இரண்டு நாள் அரசியல் மாநாடு ஐதராபாத் அருகே இன்று துவங்கியது. ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளார். தற்போது சந்திரபாபு நாயுடுவிற்கு அரசியலில் சரிவு ஏற்பட்டுள்ளது. சரிந்த செல்வாக்கினை தூக்கி நிறுத்த படாத பாடு பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன விவசாயிகள் பிரச்னையை வலியுறுத்தி 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர பாதயாத்திரை நடத்தினார். அரசியலில் அது போனியாகவில்லை.
ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்..எஸ்.ஆர்.காங். கட்சி வரவால், தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான என்.டி.ராமாராவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சியில் அதிருப்தியுடன் வெளியேறியவர்களை திருப்திபடுத்தினார்.

மூன்றாவது அணிக்கு பிரகாசமான வாய்ப்பு

ஆந்திராவில் 2014-ல் பார்லி.தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. எப்படியாவது தனது செல்வாக்கினை நிலைநிறுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்த நாயுடுவிற்கு ஒரு வாய்ப்பாக , தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது; மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் காங். கட்சி பல்வேறு ஊழல்களால் ஊறிப்போய் உள்ளது. மாநிலத்தை ஆளும் காங். ஆட்சியில் ஊழல் அமைச்சர்களை முதல்வர் கிரண்குமார் ரெட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த மாநிலத்தில் இதுவரை மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர். நிர்வாகம் எப்படி சிறப்பாக நடக்கும். வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லி. தேர்தலில் மூன்றாவது அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அந்த அணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் அதில் தெலுங்கு தேச கட்சியின் பங்கு தான் முக்கியத்துவம் பெறும். அதே வேளையில் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சியே ஆட்சி அமைக்கும் என்றார்.

No comments:

Post a Comment